Sunday, November 29, 2009
2012 கலக்கு கலக்குகிறது சென்னை தியேட்டர்களில்
கதைப்படி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'மாயன்' என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்தான், உலகின் தட்ப வெப்ப நிலையையும், பருவ காலங்களையும் கணித்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. அவர்களின் கணிப்புப்படி 2012ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு உள்ள வருடங்கள் டியானால், 2012ஆம் ஆண்டுடன் உலகம் அழிந்து விடுமா? என்ற கேள்வியை மையமாக வைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 'கொலம்பியா பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் 20 கோடி டாலர் செலவில் உருவாகியுள்ளது. தமிழில் 'ருத்ரம்' என்ற தலைப்பில், 2009, நவம்பர் 13ஆம் தேதியன்று வெளியாகிய இப்படம், சமீபத்திய தகவலின்படி வெளியான மூன்றே நாட்களி்ல் உலகம் முழுவதும் 65.2 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச் இயக்கிய தனது முந்தைய படங்களான 'இண்டிபென்டன்ஸ் டே (Independence Day )', 'த டே ஆப்டர் டுமாரோ' ( The Day After Tomorrow ) ஆகிய படங்களின் வசூலைக் காட்டிலும், இப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டும் என்று கூறப்படுகிறது. எரிமலைத் தீப்பிழம்புகள் பூமிக்குள் இருந்து சீறிப் பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது எனப் படம் பார்க்கும் ரசிகர்களை உறைய வைத்துள்ளது. சென்னையில் களை இழந்து காணப்பட்ட சில திரையரங்குகள் இப்படத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளன என்றால் அது மிகையாகாது. இந்த மொழி மாற்றுப் படத்கணிக்கப்படவில்லை. அப்பதுக்கு வார நாட்களில் கூட டிக்கெட் கிடைப்பதில்லை. சென்னையின் 13 திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 சதவிகிதம் "ஹவுஸ் ஃபுல்" காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்தப் படம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment